4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் பெண் பொறியியலாளர் மரணம்!

- Muthu Kumar
- 27 Feb, 2025
நீலாய், பிப்.27-
ஜாலான் பெர்சியாரான் நெகிரி சாலையில் நிகழ்ந்த 4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தொன்றில் ஒரு பெண் பொறியியலாளர் மரணமுற்றார். நேற்று காலை 7.25 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில் இவர் ஓட்டி வந்த புரோட்டோன் சாகா கார், புரோட்டோன் வாஜா, வோல்வோ ரக லோரி, நிஸ்ஸான் ரக லோரி ஆகியவை சம்பந்தப்பட்டதாகும் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்பி அப்துல் மாலிக் ஹஷிம் தெரிவித்தார்.
இச்சம்பவம் 34 வயதுடைய ஆடவர் ஓட்டி வந்த வோல்வோ ரக லோரி பூச்சோங்கிலிருந்து பண்டார் என்ஸ்தெக்கிற்குச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட போது நிகழ்ந்தது.அந்த லோரி 23 வயதுடைய பெண் பொறியியலாளர் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சாகா காரின் பின்புறத்தில் மோதியது.
இதனால் அந்த பெண் பொறியியலாளர் 59 வயதுடைய ஆடவர் ஓட்டிய புரோட்டோன் வாஜா பின்புறத்தில் மோதி புரோட்டோன் வாஜா தன் முன்னே சென்ற நிஸ்ஸான் ரக லோரியை மோதி விட்டது.
இச்சம்பவத்தில் புரோட்டோன் சாகா கார் ஓட்டுநர் கடுமையாகக் காயமுற்றதில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அவர் மரணமுற்றார். சொற்பக் காயமுற்ற புரோட்டோன் வாஜா ஓட்டுநர் சிகிச்சைக்காக சிரம்பான், துவாங்கு ஜஃபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதில் லோரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் 411ஆவது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் எஸ்பி அப்துல் மாலிக் ஹஷிம் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *