பினாங்கு அரசு ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் ஹரி ராயா போனஸ்! முதல்வர் அறிவுப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 5: பினாங்கில் உள்ள அரசு ஊழியர்கள் அரை மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000, ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி உதவியாகப் பெறுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாமிய மதப் பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், பினாங்கில் உள்ள தனியார் சீனப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் RM300 பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

பினாங்கில் மொத்தம் 7,066 அரசு ஊழியர்கள் இந்த உதவியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த உதவி மார்ச் 19 முதல் வழங்கப்படும். மேலும் மாநில அரசால் மொத்தம் RM7.81 மில்லியன் ஒதுக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், மாநில அரசின் 2030 தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் அரசு ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கு இந்த உதவி மாநிலத்தின் பாராட்டுக்கான அடையாளமாகும் என்று பாடாங் கோத்தா  சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்!

Ketua Menteri Pulau Pinang, Chow Kon Yeow, mengumumkan bahawa penjawat awam negeri akan menerima bantuan Hari Raya Aidilfitri berupa setengah bulan gaji atau minimum RM1,000. Guru sekolah agama dan sekolah persendirian Cina akan mendapat RM300. Bantuan ini melibatkan 7,066 penerima dan diagihkan mulai 19 Mac.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *