மெரிடின் ஈஸ்ட் பாசிர் கூடாங் மேம்பாலத் திட்டம்-ஜொகூர் மக்களுக்கு புதிய நம்பிக்கை!

- Muthu Kumar
- 05 Mar, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர்பாரு. மார்ச் 5-
மெரிடின் ஈஸ்ட் பாசீர் கூடாங் மேம்பாலத் திட்டம் 2021 ஆம் ஆண்டு முதல் நிலுவையிலிருந்த நிலையில், அதன் தீர்வு தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது என ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார். மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தலைமையில் நடந்த கலந்துரையாடலின் விளைவாக, மேம்பால அமைப்பை செயல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தில் மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சு, ஜொகூர் மாநில அரசு, மலேசிய நெடுஞ்சாலை வாரியம். சீனாய்-டெசாரு விரைவுச்சாலை பெர்ஹாட் மற்றும் மெரிடின் ஈஸ்ட் சென் பெர்ஹாட் ஆகிய பல அமைப்புகள் ஈடுபட்டன.
சாஹாயா மாசாய் டோல் வசூல் அமைப்பின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் இதற்கான மதிப்பீட்டுக் கட்டணம் வெ. 7 மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சீனாய்-டெசாரு விரைவுச்சாலைக்கு இருபுற வழிகளைத் திறக்கிறது. இதனால் பாசீர் கூடாங் பகுதியிலுள்ள போக்குவரத்து நெரிசல் குறைந்து, அந்நகரவாசிகள் பயணம் செய்ய வசதியாகும்.
கட்டுமானப் பணிகள் மிக விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் தொடர்ந்து தடையின்றி நிறைவேறுவதை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சுடன் இணைந்து, ஜொகூர் மாநில அரசு இந்த திட்டம் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவடைய உறுதிபூண்டுள்ளது.
மேம்பால அமைப்பு முழுமையாக செயல்படுத்தப்பட்டதும், கொங் கொங் பகுதியிலிருந்து சீனாய்-டெசாரு விரைவுச்சாலையை நேரடியாக அணுகக் கூடியதாக இருக்கும். இது கொங் கொங் முதல் பாசீர் கூடாங் மற்றும் தஞ்சோங் லங்சாட் வரை செல்லும் பயணத்தை 7 கிலோமீட்டராக குறைக்கும். இதனால் பயணிகள் விரைவாக தொழில்துறை பகுதிகளுக்குச் செல்லமுடியும். மேலும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த வழிகளைத் திறப்பது, நீண்ட நாட்களாகக் காத்திருந்த ஜொகூர் மக்களுக்கும், விரைவுச்சாலையைப் பயன்படுத்துவோருக்கும் பெரும் நன்மையை அளிக்கவுள்ளது என்றார்.
Projek jambatan Meridian East Pasir Gudang yang tertangguh sejak 2021 akan dipercepatkan. Keputusan akhir telah dicapai melalui perbincangan dengan Kementerian Kerja Raya Malaysia dan kerajaan Johor. Pembinaan akan bermula segera dan dijangka siap hujung tahun ini, mengurangkan kesesakan lalu lintas serta memudahkan perjalanan penduduk.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *