PKR கட்சியின் முதிவர்களே இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்! HASSAN KARIM வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 01 Mar, 2025
மார்ச் 1,
PKR கட்சியின் தேர்தல் நாடளாவிய நிலையில் நடைபெற்று வரும் நிலையில் மூத்த PKR ஆளுமைகள் இளம் தலைவர்களுக்கு வழிவிட்டு விலகி நிற்கும்படி PASIR GUDANG நாடாளுமன்ற உறுப்பினரும் PKR கட்சியின் ஜொகூர் மாநில முன்னாள் தலைவருமான HASSAN KARIM வலியுறுத்தினார். தகுதியான இளைஞர்களைக் கட்சிக்குள் இருந்தால் மட்டும் போதாது என்றும் அவர்கள் தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்றும் HASSAN KARIM வலியுறுத்தினார்.
வயது முதிர்ந்தவர்களுக்குத் தம்மால் சுழன்று வேலை செய்ய முடியாது என தெரிந்தும் பதவியில் இருக்கவே விரும்புவார்கள். அவர்களாகவே உணர்ந்து வெளியாக வேண்டும். இளைஞர்களுக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதை உணர்த்தி, இத்தவணைக்கான PKR கட்சி தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்பதையும் வெளிப்படையாக அறிவித்ததுடன், இளைஞர்களுக்காகத் தமது வாக்கு இருக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
Ahli Parlimen Pasir Gudang Hassan Karim menggesa pemimpin veteran PKR memberi laluan kepada golongan muda dalam kepimpinan parti. Beliau menekankan kepentingan peluang untuk belia dan mengumumkan tidak akan bertanding dalam pemilihan parti kali ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *