எம்பொக்ஸ் வைரஸ் தடுப்பூசி மலேசியா வந்தடைந்தது!

- Muthu Kumar
- 22 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 22-
குரங்கு அம்மை அல்லது எம்பொக்ஸ் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான எம்விஏ-பிஎன் தடுப்பூசியின் மொத்தம் 2,220 சொட்டு மருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மலேசியா வந்தடைந்தது.கடந்த ஆண்டு செப்டம்பரில் தாம் அறிவித்திருந்த பிறகு, ஆசியான் கோவிட்-19 நடவடிக்கை நிதி மூலம் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கீப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
எம்பொக்ஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் மொத்தம் 1,100 பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் அவர்களில் இத்தொற்றுக் கண்டிருப்போருடன் நெருக்கமாக இருப்போரும் அந்நோய்க்
கண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
"மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே ஒருவருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படும் என்பதுடன், பொதுவில் அனைவருக்கும் அது செலுத்தப்படாது. "இந்நோய்க் கிருமிகள் சுலபத்தில் தொற்றிக் கொள்ளக் கூடியவர்கள் குறிப்பாக மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாப்பதில் இத்தடுப்பூசி திட்டம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஒரு முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
எம்பொக்ஸ் வைரஸ்க்கான எம்விஏ-பிஎன் தடுப்பூசி மற்றும் தெக்கோவிரிமாட் வைரஸ் எதிர்ப்பு (டிபிஓஎக்ஸ்எக்ஸ் மருந்தை மலேசியா விரைவில் பெறவிருப்பதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சுல்கீப்ளி தெரிவித்திருந்தார்.காங்கோ ஜனநாயகக் குடியரசில் புதிய வகை எம்பொக்ஸ் அதாவது கிளேட் 1பி நோய்ச் சம்பவங்கள் அதிகளவில் பரவி வந்ததைத் தொடர்ந்து, உலக பொதுச் சுகாதார அவசர நிலையாக எம்பொக்ஸை, உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஎச்ஓ கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரகடனம் செய்திருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *