மீனவர் நலன்களைப் பாதுகாக்க உயர் அளவிலான செயற்குழு உருவாக்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

பாகான் டத்தோ, மார்ச் 6-

நாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாளவும் அவர்களின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கவும் உயர் அளவிலான செயற்குழு. ஒன்று உருவாக்கப்படவிருக்கின்றது.

தாம் தலைமையேற்கவிருக்கும் அச்செயற்குழு. இதர ஐந்து அமைச்சுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்று துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.விவசாய, உணவு உத்தரவாத அமைச்சு, நிதி அமைச்சு, உள்துறை அமைச்சு, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு அமைச்சர், பொருளாதார அமைச்சு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ள அமைச்சுகளாகும் என்று ஸாஹிட் ஹமிடி கூறினார்.

உயர் அளவிலான செயற்குழு தொடங்குவதற்கான பரிந்துரை வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்படும் என்று அவர் குறிப்பிட்டார். "ஐந்து மண்டலங்களில் நடைபெற்ற சந்திப்பு கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நிச்சயம், இப்பிரச்சினைகள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. ஆனால், பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தொடர்பு உள்ளது. என்றார் அவர்.

நேற்று, பேராக், பாகான் டத்தோவில், மேற்கு கடற்கரை மண்டல மீனவர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார். மேலும், மேற்கு கடற்கரை மண்டலத்தில் உள்ள 66 மீனவர்களுக்கு 720,000 ரிங்கிட் மதிப்பிலான மீன்பிடி உபகரண உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

Timbalan Perdana Menteri, Datuk Seri Dr. Ahmad Zahid Hamidi mengumumkan penubuhan jawatankuasa khas untuk menangani isu nelayan dengan kerjasama lima kementerian. Cadangan ini akan dibawa ke kabinet Jumaat ini. Bantuan peralatan menangkap ikan bernilai RM720,000 turut disalurkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *