இது மலாய்க்காரர்களின் நாடு மட்டுமல்ல-முன்னாள் அமைச்சர் நஸ்ரி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 7-

உண்மையான பல்லின உணர்வைப் புலப்படுத்திவரும் சபா மற்றும் சரவாக் மக்களை அமெரிக்காவுக்கான முன்னாள் மலேசியத் தூதர் நஸ்ரி அஸிஸ் பாராட்டியுள்ளார். அவர்களைத் தீபகற்ப மலேசியாவில் உள்ள மலாய்க்காரர்களும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நாடு மலாய்க்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமானதல்ல. இது பல்லின மக்களும் பல்வேறு சமயத்தினரும் வாழும் நாடு.

மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சார்பாக மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று எஃப்எம்டி இணையப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நஸ்ரி வலியுறுத்தினார். நாட்டின் அரசியல் போக்கு குறித்தும் தீவிரமடைந்துவரும் அரசியல் சார்பு இஸ்லாமின் செல்வாக்கினால் மலேசியர்கள் எத்தகைய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்பது குறித்தும் கருத்துரைக்கும்படி அந்த நேர்காணலில் நஸ்ரியிடம் வினவப்பட்டது.

மலேசிய அடையாளம் மீது சபா மக்களும் சரவாக் மக்களும் மிகுந்த பற்றை வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியர்கள் எனும் உணர்வோடுதான் சபாவும் சரவாக்கும் வழிநடத்தப்படுகிறது. அம்மாநிலங்களின் மக்கள் தங்களின் பின்புலத்தைப் பொருட்படுத்தாமல் மலேசியர்களாகவே ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனை நாமும் பின்பற்ற வேண்டும் என்று அம்னோவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான நஸ்ரி அறிவுறுத்தினார்.

தீபகற்ப மலேசியாவில் உள்ள மலாய்க்காரர்களுள் பெரும்பாலோர் தேசியத்தைவிட இனத்திற்குத்தான் அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர். அரசியலுக்கு உகந்ததாக இருக்கும்போதுதான் அவர்கள் தங்களை மலேசியர்கள் என்று கூறிக்கொள்கின்றனர். குறிப்பாக, தேர்தல் நேரத்தின்போது மலாய்க்காரர்கள் அல்லாதாரின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்கள் அவ்வாறு கூறுவார்கள் என்றார் அவர்.அவர்கள் போலி மலேசியர்கள் என்றும் அவர் வருணித்தார்.

“இது மலாய்க்காரர்களின் நாடு என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தேசிய விளையாட்டுச் சாதனையாளர்களான நிக்கோல் டேவிட் மற்றும் லீ சோங் வேய் ஆகியோர் அனைத்துலக நிலையில் விளையாடும்போது சீனராகவோ இந்தியராகவோ அடையாளப்படுத்தப்படவில்லை. மலேசியாவுக்காகத்தான் அவர்கள்
விளையாடினர் என்றார் அவர்.

சர்ச்சைக்குரிய இந்திய மதப்போதகர் ஸக்கீர் நாயக் தொடர்ந்து மலேசியாவில் தங்கியிருப்பதையும் நஸ்ரி நேற்று குறைகூறினார்.இந்தியாவில் பிரச்சினை வந்ததால்தான் மலேசியாவுக்கு அவர் ஓடிவந்தார். முஸ்லிம்களாக நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் முஸ்லிம் அல்லாதாரிடம் அவர்கள் எவ்வாறு பழக வேண்டும் என்றும் அவர் நமக்கு போதனை செய்கிறார்.

மலாய்-முஸ்லிமாக எப்படி இருக்க வேண்டும் என்று அவர் எனக்குக் கூறத் தேவையில்லை. நான் இங்கேயே பிறந்தவன்.எனவே, இது பல இனங்களும் பல சமயத்தினரும் வசித்துவரும் நாடு எனும் உண்மையை உணர்ந்திருக்கிறேன். முஸ்லிம் அல்லாத மலேசியர்களுடன் எவ்வாறு இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்று முன்னாள் சட்ட விவகார அமைச்சருமான நஸ்ரி தெரிவித்தார்.

மலேசியாவில் பொதுஇடங்களில் சமய உரை நிகழ்த்த ஸக்கீருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்டு விட்டது என்பதை கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதியன்று உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியது.வெறுப்புப் பேச்சு மற்றும் கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் ஸக்கீருக்கு எதிராக விசாரணைக் கோப்புகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டில் அவர் மலேசியாவில் தஞ்சமடைந்தார்.தற்போது அவர் புத்ராஜெயாவில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

Bekas duta Malaysia ke AS, Nazri Aziz, memuji perpaduan kaum di Sabah dan Sarawak, menyeru orang Melayu di Semenanjung mencontohi mereka. Beliau menolak Malaysia sebagai negara eksklusif Melayu-Islam dan mengkritik pendakwah Zakir Naik kerana mencampuri urusan perpaduan negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *