MP சிவகுமார் DAP மத்திய செயற்குழுவுக்கு மீண்டு போட்டி!

- Shan Siva
- 24 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 24: அடுத்த மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில்,
டிஏபியின் 30 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழுவிற்குத் தாம் மீண்டும்
போட்டியிடவிருப்பதாக மூன்று முறை பத்து கஜா எம்.பி.யாக விளங்கும் வி. சிவகுமார்
எஃப்எம்டியிடம் உறுதிப்படுத்தினார்.டி ஏபி தேர்தலில் போட்டியிட தாம்
பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறினார்.
டிசம்பர் 2023 இல் பிரதமர் அன்வார் இப்ராஹிமின்
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சிவகுமார், 1997 இல் டிஏபியில் சேர்ந்தார். 2008 இல் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்று, துரோனோ
சட்டமன்ற உறுப்பினரானார்.
எம்.குலசேகரன் உட்பட
கட்சியின் நான்கு முக்கிய தலைவர்கள் விலகியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு சிஇசி தேர்தலில் மற்ற டிஏபி தலைவர்கள்
போட்டியிடுவார்களா? என்பது குறித்து ஊகங்கள்
எழுந்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *