கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள் கழிவறைகளையும் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, பிப். 24-

கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்கள், சமூகச் சேவை உத்தரவுக்கிணங்க, 12 மணி நேரத்திற்கு கழிவறைகளையும் கால்வாய்களையும் சுத்தம் செய்வதோடு, புற்களை வெட்டும் வேலையையும் செய்ய வேண்டும்.அத்தகைய வேலைகளை செய்யும்போது சம்பந்தப்பட்டவர்கள், அதற்கென்று தயார் செய்யப்பட்டிருக்கும் சீருடைகளையும் அணிந்திருக்க வேண்டும் என்றும், வீடமைப்பு, ஊராட்சிமன்றத்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

மலேசியாவை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும் போக்கை மலேசியர்கள் மத்தியில் நிலைநாட்ட இத்தகைய நடவடிக்கை மிக அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். “கிழக்கை நோக்கும் கொள்கையை நாம் 40 ஆண்டுகளாகக் கொண்டிருக்கும் வேளையில், அதை ஒரு சட்டமாக அறிமுகப்படுத்துவதற்கான சரியான நேரம் இதுதான்.“கார்க் கண்ணாடிகளைத் திறந்து குப்பைகளை வீசாதீர்கள். குப்பைத் தொட்டிகள் இருக்கின்றன. ஆனால், இன்னமும்“சுத்தம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இத்தகையோரிடம் சமரசம் காணப்படாது" என்று பேராக், ஈப்போவில் ஙா நேற்று ஞாயிற்றுக்கிழமை கூறியதாக உத்துசான் மலேசியா தெரிவித்தது.

இதன் தொடர்பிலான சட்டத்தைப் பின்பற்றத் தவறுவோருக்கு 2,000 வெள்ளி முதல் 10 ஆயிரம் வெள்ளி வரையில் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் மூலம் இத்தகைய உத்தரவை அமல்படுத்த தமது அமைச்சு எண்ணம் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இதன் தொடர்பான சட்ட திருத்த மசோதா மக்களவையிலும் மேலவையிலும் அங்கீகரிக்கப்பட்டவுடன் அது அரசாங்கப் பதிவேட்டில் பதியப்பட்டு, இவ்வாண்டில் நாடு முழுமையிலும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று ஙா கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *