மருத்துவமனையில் சிறுமியின் மரணம்! முறையாக விசாரிக்கப்படும்! YB.A.சிவநேசன் உறுதி!

- Sangeetha K Loganathan
- 03 Mar, 2025
மார்ச் 3,
தெலுக் இந்தான் மருத்துவமனையில் தவறான ஊசி போடப்பட்டதால் 3 வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பேராக் மாநிலச் மனிதவளம், சுகாதாரம், இந்தியர் நலப்பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார். முன்னதாகச் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைய நிர்வாகம் விசாரணையை மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய நிலையில் இதனை மருத்துவமனை நிர்வாகம் விசாரிக்கவில்லை என்றும் சுகாதார அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பெற்றோர்களின் மனவலியைத் தாம் உணர்வதாகவும் குற்றம் நிகழ்ந்திருந்தால் அது யாராக இருந்தாலும் அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் இது தொடர்பான விசாரணைக்குத் தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக்வும் விசாரணையில் மருத்துவமனையின் நிர்வாகம் சம்மந்தப்படாது எனும் நம்பிக்கையையும் சிவநேசன் வழங்கினார்.
JKN Perak sedang menyiasat dakwaan seorang kanak-kanak perempuan meninggal dunia selepas menerima suntikan di sebuah hospital di Teluk Intan. Exco Kesihatan Perak menegaskan siasatan masih awal dan keluarga digesa membuat aduan rasmi jika tidak berpuas hati.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *