கட்சியின் சிஇசி பதவிக்கு சௌ கோன் இயோவ் போட்டி!

- Muthu Kumar
- 24 Feb, 2025
ஜோர்ஜ்டவுன், பிட் 24-
அடுத்த மாதம் நடைபெற விருக்கும், ஜசெசு மத்திய நிர்வாகக் குழு தேர்தலில் போட்டியிட இருப்பதை, பினாங்கு முதலமைச்சர் செள கோன் இயோ நேற்று உறுதிப்படுத்தினார்.
“கட்சியின் சிஇசி தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்" என்று, பினாங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சினார் ஹரியானிடம் சௌ தெரிவித்தார்.
“கடந்த 2001அம் ஆண்டு முதல் நான் சிஇசியில் ஓர் உறுப்பினராக இருந்து வருகிறேன். பதவியை தற்காத்துக் கொள்ள நான் நியமனமும் செய்யப்பட்டுள்ளேன்.
மாநில கட்சித் தேர்தலில் இருந்து நான் விலகிக் கொண்டதுபோல் இப்போட்டியில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்" என்று சௌ உறுதியாகக் கூறினார்.
தற்போது ஜசெகவின் உதவித் தலைவர்களில் ஒருவராக இருக்கும் சௌ, கடந்த செப்டம்பரில் நடந்த மாநில கட்சித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார்.
ஜசெகவின் 18ஆவது தேசிய மாநாட்டுடன் சேர்த்து, அதன் சிஇசி பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் நால்வர்
அறிவித்துள்ளனர்.தேசிய ஜசெக ஆலோசகர் டான் கோக் வாய், தேசியப் பொருளாளர் ஃபோங் கூய் லுன், கட்சியின் மூத்த தலைவர்களான எம். குலசேகரன் மற்றும் பி பூன் போ ஆகியோரே அவர்களாவர்.அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடுவதற்காக தாங்கள் இம்முடிவை எடுத்திருப்பதாக அதற்கு அவர்கள் காரணம் கூறியிருக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *