படகில் பயணித்த மூன்று வெளிநாட்டினர் மரணம்!

- Shan Siva
- 26 Feb, 2025
ஜோகூர் பாரு, பிப் 26: கடல் அலையில் அடித்து வரப்பட்ட படகு கரையை மோதியதில் அதில் பயணித்த மூன்று வெளிநாட்டினர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று பந்தாய் தஞ்சோங் லங்காட்டில் நிகழ்ந்தது.
கடந்த திங்கள்கிழமை இரவு 11.18 மணியளவில் பைபர்கிளாஸ் படகில் மாசாய் நகர் நோக்கிச் பயணம் செய்த படகு கரையோரம் ஒதுங்கிக் கிடப்பதை மீனவர்கள் கண்டதைத் தொடர்ந்து அதில் பயணம் செய்தவர்கள் காணாமல் போனதை அறிந்து போலீசில் புகாரளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சுக்லால் எனும் நேப்பாள பிரஜையின் உடல் நேற்றிரவு 12.19 மணியளவில் சாங்கி கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதை சிங்கப்பூர் கடலோர காவல் துறையினர் உறுதிப்படுத்தினர். இதன் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை கெபாயான் தஞ்சோங் லங்சாட் மற்றும் அருகிலுள்ள படகுத் துறை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதில், பூலாவ் தெக்கோங் அருகே மற்றொரு நேப்பாளியான கலாம் ராம் பாஹ்துரின் உடலை சிங்கை கடலோரக் காவல் துறையினர் காலை 11.00 மணிக்கு கண்டு பிடித்தனர்.
இந்தோனேசியரான மூன்றாவது நபரின் உடல் மாலை 3.34 மணிக்கு போர்ட் பார்க் தஞ்சோங் லங்காட் படகுத் துறையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் கண்டு பிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *