சட்டவிரோதமாக வேலை செய்த 420 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 24 Feb, 2025
பிப்ரவரி 24,
ஜொகூரில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 420 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 தொழில்சாலைகளில் உள்ள 753 வெளிநாட்டினர்களிடம் சோதனையை மேற்கொண்ட நிலையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 420 பேருடன் 5 உள்ளூர் நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஜொகூர் மாநிலக் காவல் துறையின் விசாரணையின்படி 12 தொழில்சாலைகளில் முறையான ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர்கள் வேலை செய்து வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை உதவி இயக்குநர் Jafri Embok Taha தெரிவித்தார். ஜொகூரின் மெர்சிங், செகாமாட் கோத்தா திங்கி பகுதிகளில் காலை 9 மணிக்கு இச்சோதனையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
Sebanyak 420 warga asing yang bekerja secara haram ditahan dalam serbuan Imigresen di Johor. Operasi melibatkan pemeriksaan terhadap 753 pekerja asing di 12 kilang di kawasan Mersing, Segamat dan Kota Tinggi. Lima warga tempatan turut ditahan kerana dipercayai terlibat dalam pengambilan pekerja tanpa dokumen sah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *