அதிகரிக்கும் போலி சமூக ஊடகக் கணக்குகள்! அமைச்சு வருத்தம்

- Shan Siva
- 28 Feb, 2025
கூலாய், பிப் 28: நாட்டில் போலி சமூக ஊடகக் கணக்குகள் அதிகரித்து வருவதை தகவல் தொடர்பு அமைச்சு தீவிரமாகக் கருதுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் பெயரைப் பயன்படுத்துபவர்களும் அடங்கும் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
.மலேசிய தொடர்பு
மற்றும் பல்லூடக ஆணையமான (MCMC) இந்த போலி
கணக்குகளை அகற்றுவதற்கு வசதியாக சமூக ஊடக தள வழங்குநரான META-விற்கு URL இணைப்புகளை வழங்கியிருந்தாலும், இந்தப் பிரச்சினை தொடர்கிறது, இது மற்ற முக்கிய நபர்களையும் பாதிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இது ஒரு
ஆரோக்கியமற்ற போக்கு என்று குறிப்பிட்ட அவர், இந்தப் போலி கணக்குகள் மன்னரைத் தாண்டி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும்
உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
முக்கிய
நபர்களின் படங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுத்தும்
கணக்குகளைத் தடுக்க META போன்ற சமூக ஊடக
தளங்கள் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தியோ ஏமாற்றத்தை
வெளிப்படுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *