நாளை Ismail Sabri-யிடம் SPRM விசாரணை நடத்தும்! - Tan Sri Azam Baki

- Sangeetha K Loganathan
- 04 Mar, 2025
மார்ச் 4,
RM700 மில்லியன் சம்பந்தப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob நாளை காலை 10.30 மணிக்கு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். KELUARGA MALAYSIA திட்டத்துடன் சம்மந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் RM700 மில்லியனை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்ததை அடுத்து இந்த நிதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் சம்மந்தம் உள்ளதா என்பதற்கான விசாரணை இது என Tan Sri Azam Baki தெரிவித்தார்.
Bera நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Ismail Sabri Yaakob-இன் சிறப்பு அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருக்கும் நிலையில் நாளை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் மற்றப்படி அவர்தான் குற்றவாளி என தாம் இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது என்றும் Datuk Seri Ismail Sabri Yaakob-க்கு எதிராக 31 சாட்சியங்கள் இருப்பதாக வெளிவந்த செய்தியையும் தாம் மறுக்கவில்லை என SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki நாசுக்காகச் செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார்.
Bekas Perdana Menteri Datuk Seri Ismail Sabri Yaakob akan hadir ke SPRM esok bagi siasatan kes RM700 juta berkaitan projek Keluarga Malaysia. SPRM menyiasat kaitannya dengan dana yang disita, sementara 31 saksi telah dikenalpasti, namun kesalahannya belum disahkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *