மலேசியா முழுவதும் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் பிரதமர் அன்வார்!

- Sangeetha K Loganathan
- 05 Mar, 2025
மார்ச் 5,
பிரதமர் அன்வார் மக்களை நேரடியாகச் சந்திக்க ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலை மக்களை நேரடியாகச் சந்திப்பதாகவும் அவர்களின் வாழ்வாதாரச் சிக்கலை நிவர்த்தி செய்ய இந்த பயணம் அவசியமானது என்பதால் பிரதமர் அன்வார் அடுத்த வாரம் முதல் ஒவ்வொரு மாநிலமாகச் செல்லவிருப்பதாகப் பிரதமர் துறையின் தலைமை செய்தியாளர் Tunku Nashrul Abaidah தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு பிரதமர் அன்வார் மாநிலம் முழுமைக்கும் மக்களை நேரடியாகச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில் சம்மந்தப்பட்ட மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மக்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகவும் வறுமை ஒழிப்பு, கல்வி மேம்பாடு, சுகாதார மேம்பாடு, வீட்டு வசதி என்பனவற்றை முக்கிய அம்சமாகக் கொண்டு அதற்கானத் தீர்வை நோக்கிய பயணமாக இது இருக்கும் என பிரதமர் துறையின் தலைமை செய்தியாளர் Tunku Nashrul Abaidah நம்பிக்கை அளித்தார். பொதுமக்கள் அனைவரும் தடையின்றி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படியாக நேர்த்தியுடனும் முன் அறிவிப்புடனும் பிரதமர் அன்வாரின் மக்கள் சந்திப்பு நடத்தப்படும் என பிரதமர் துறையின் தலைமை செய்தியாளர் Tunku Nashrul Abaidah தெரிவித்தார்.
Perdana Menteri Anwar akan menjelajah setiap negeri mulai minggu depan untuk bertemu rakyat secara langsung. Lawatan ini bertujuan menangani isu kemiskinan, pendidikan, kesihatan dan perumahan. Acara akan diatur oleh agensi kerajaan dengan penyertaan terbuka kepada orang ramai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *