ஆற்றில் மூழ்கிய 6 வயது சிறுவன்!

- Sangeetha K Loganathan
- 06 Mar, 2025
மார்ச் 6,
Keningau பகுதியில் உள்ள Kampung Baginda ஆற்றில் மூழ்கியதாக நம்பப்படும் 6 வயது சிறுவனைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருவதாக Keningau மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sharudy Delamin தெரிவித்தார். மாலை 3.18 மணிக்கு அவசர அழைப்புப் பெற்ற நிலையில் சம்மந்தப்பட்ட பகுதிக்கு மீட்புப் படையினர் விரைந்த நிலையில் ஆற்றங்கரையில் காணாமல் போனதாக நம்பப்படும் சிறுவனின் செறுப்புக் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இரவு 7 மணிவரையில் Kampung Baginda ஆற்றில் சுமார் 100 மிட்டர் தூரம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் தற்போது பொதுமக்களும் தேடுதல் பணியை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். காணாமல் போன 6 சிறுவன் Zulfazli Azrul என தெரிய வந்திருக்கும் நிலையில் ஆற்றுப் பகுதியிலும் அருகில் உள்ள காடுகளிலும் தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாக Keningau மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sharudy Delamin தெரிவித்தார்.
Seorang kanak-kanak lelaki berusia 6 tahun dipercayai lemas di Sungai Kampung Baginda, Keningau. Pasukan penyelamat menggiatkan operasi mencari sejak menerima panggilan kecemasan pada 3.18 petang. Kasut mangsa ditemui di tebing sungai dan usaha pencarian diteruskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *