22 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகின! – ஈப்போ

- Sangeetha K Loganathan
- 03 Mar, 2025
மார்ச் 3,
ஈப்போவில் உள்ள Kampung Tekah Baru வணிகக் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் பட்டறை உட்பட 4 கடைகள் தீயில் கருகியது. அதிகாலை 5.11 மணிக்குத் தீவிபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாகவும் 2 மணிநேரப் போராட்டத்திற்குப் பின் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் பேராக் மாநிலத் தீயணைப்பு ஆணைய அதிகாரி Johari Mohammad தெரிவித்தார்.
தீ வேகமாகப் பரவிய நிலையில் மோட்டார் சைக்கிள் பட்டறையில் வைக்கப்பட்டிருந்த 22 மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் தீயினால் கருகியதாகவும் மற்ற 3 கடைகளுக்குத் தீ பரவும் முன்னமே தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். கார் பட்டறை காலியாக இருந்ததால் 30% சேதமடைந்ததாகவும் உணவகம் 50% சேதமடைந்ததாகவும் மோட்டார் சைக்கிள் பட்டறை 70% சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
Sebanyak 22 motosikal musnah dalam kebakaran yang melibatkan empat kedai termasuk bengkel motosikal di Kampung Tekah Baru, Ipoh. Kebakaran awal pagi itu tidak melibatkan kemalangan jiwa dan berjaya dipadamkan sepenuhnya oleh pasukan bomba dalam masa dua jam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *