கோலா சிலாங்கூர் பி.கே.ஆர் கட்சியில் சர்ச்சை! ஆடவர் கைது!

top-news

மார்ச் 4,

பி.கே.ஆர் கட்சியின் கோலா சிலாங்கூர் மாவட்ட ஆண்டுத் தேர்தலில் கைகலப்பு ஏற்பட்டதாக வெளியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் 45 வயது ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகக் கோலா சிலாங்கூர் மாவட்டக் காவல் ஆணையர் Azaharudin Tajudin தெரிவித்தார். ஆண்டுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சம்மந்தப்பட்ட ஆடவர் கொலை மிரட்டல் விடுத்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாலை 4.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Azaharudin Tajudin தெரிவித்தார்.

கூட்டத்தின் நடுவே தம்மைத் தாக்கியதாகவும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்காமல் வெளியேறும்படி மிரட்டியதாகவும் வெளியேறாவிட்டால் கொலை செய்வதாக 45 வயது ஆடவர் மிரட்டியதாகக் கட்சி உறுப்பினரானப் பெண் ஒருவர் கோலா சிலாங்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக Azaharudin Tajudin தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட கைகலப்புத் தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்தவர்கள் சாட்சியம் அளிக்க கோலா சிச்லாங்கூர் காவல் நிலையத்திற்கு வரும்படியும் 03-3289 1222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் Azaharudin Tajudin கேட்டுக் கொண்டார்.

Kekecohan tercetus dalam mesyuarat tahunan PKR Kuala Selangor menyebabkan seorang lelaki 45 tahun ditahan kerana ugutan jenayah terhadap ahli parti wanita. Insiden ini dirakam dan tular di media sosial. Polis meminta saksi tampil membantu siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *