லாரியை மோதிய பேருந்து! 8 பேர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 05 Mar, 2025
மார்ச் 5,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்ததாக Renggam மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Maznan Muhamad தெரிவித்தார். காலை 6.45 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் கூலாய் அருகில் இவ்விபத்து ஏற்பட்ருப்பதாக அவசர அழைப்புக் கிடைத்த நிலையில் 10 மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக அவர் தெரிவித்தார்.
பேருந்தில் பயணித்த 7 பயணிகளுடன் பேருந்து ஓடுநரும் படுகாயம் அடைந்ததாகவும் 4 பயணிகள் பேருந்தில் சிக்கியதால் அவர்களை மீட்பதற்குத் தாமதமாகியதாகவும் Maznan Muhamad தெரிவித்தார். காலை 8.36 மணிக்குப் பேருந்தில் சிக்கியிருந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lapan individu cedera dalam kemalangan antara bas ekspres dan treler bermuatan besi di Lebuhraya PLUS arah selatan. Empat mangsa tersepit dan diselamatkan bomba manakala empat lagi keluar sendiri. Pemandu treler tidak cedera. Punca kemalangan masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *