பள்ளியின் முதல் நாளில் விபத்து! கை கால்கள் துண்டிக்கப்பட்ட கோர விபத்து!

- Sangeetha K Loganathan
- 19 Feb, 2025
பிப்ரவரி 19,
நிப்போங் தெபாலில் உள்ள சுங்கை பக்காப் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவனும் 7 வயது சிறுவனும் 50 வயது பெண்மணியும் படுகாயம் அடைந்தனர். காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் லாரியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாக நம்பப்படுகிறது. விபத்தில் 7 வயது சிறுவனின் இடது கை துண்டிக்கப்பட்டதாகவும் 5 வயது சிறுவனின் வலது கால் துண்டிக்கப்பட்டதாகவும் 50 வயது மோட்டார் சைக்கிளோட்டியானப் பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் தன் பேரப்பிள்ளையை முதல் நாள் பள்ளிக்குக் கொண்டு செல்லும் வழியில் இவ்விபத்து நிகழ்ந்தாகத் தெரிய வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட 2 சகோதரர்களும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் துண்டிக்கப்பட்ட கை கால்களை மீண்டும் இணைப்பதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dua kanak-kanak dan seorang wanita cedera parah dalam kemalangan motosikal dengan lori di Sungai Pakap. Seorang kanak-kanak kehilangan tangan, manakala seorang lagi kehilangan kaki. Mereka sedang menerima rawatan pemulihan di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *