வாகனம் விபத்துக்குள்ளானதில் 4 குழந்தைகள் உட்பட எழுவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 02 Mar, 2025
மார்ச் 2,
இன்று அதிகாலை பினாங்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு வாகனம் விபத்துக்குள்ளானதில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை 1.46 மணிக்குப் பேராக்கிலிருந்து பினாங்கு செல்லும் நெடுஞ்சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த் Toyota Innova ரக வாகனம் சாலையின் தடுப்புச் சுவரை மோதி மின்கம்பத்தில் மோதியதாக நம்பப்படுகிறது. விபத்தின் போது வாகனத்தில் இருந்த 4 குழந்தைகளும் படுகாயம் அடைந்ததாகவும் மீட்பு ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பொதுமக்கள் வாகனத்திலிருந்த 7 பேரையும் பத்திரமாக மீட்ட நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட 7 பேரும் தற்போது பினாங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah Toyota Innova hilang kawalan dan melanggar penghadang jalan serta tiang elektrik di lebuh raya Pulau Pinang. Seramai tujuh cedera termasuk empat kanak-kanak. Mangsa diselamatkan orang awam sebelum dihantar ke hospital untuk rawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *