வாகனங்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலி! மூவர் படுகாயம்!

top-news

மார்ச் 5,


கோத்தா திங்கியிலிருந்து குளுவாங் செல்லும் சாலையில் இரு வாகனங்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் 59 வயது பெண் பலியானதுடன் மூவர் படுகாயம் அடைந்தனர். நேற்று காலை 8.45 மணிக்கு விபத்து தொடர்பான அவசர அழைப்பைப் பெற்றதாகவும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டதாகவும் கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.

18 வயது இளைஞர் ஓட்டிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மற்றொரு வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Yusof Othman தெரிவித்தார். விபத்தில் படுகாயம் அடைந்த நால்வரும் கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 59 வயது பெண் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குக் காரணமான 18 வயது இளைஞர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.

Seorang wanita berusia 59 tahun maut manakala tiga yang lain cedera dalam kemalangan dua Proton Saga di Jalan Kota Tinggi – Kluang. Kemalangan dipercayai berlaku apabila sebuah kereta memasuki laluan bertentangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *