இஸ்மாயில் சப்ரியின் சிறப்பு அதிகாரிகளின் ஊழல்! மேலும் 8 பேரிடம் விசாரணை!

top-news

பிப்ரவரி 27,

முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaaakob இன் சிறப்பு அதிகாரிகளான நால்வர் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் வழக்கின் விசாரணைக்காக மேலும் 8 பேரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரிக்கவிருப்பதாக MACC தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். சம்மந்தப்பட்ட வழக்கின் விசாரணையில் பணமோசடி தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் ஆவணங்களைச் சோதனையிட்டதில் மேலும் 8 பேர் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் அடுத்த வாரத்திற்குள் விசாரணை நடத்தவிருப்பதாகவும் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார்.

தற்போதைய விசாரணையில் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaaakob சம்மந்தப்பட்டவர்களை மட்டுமே விசாரித்து வருவதாகவும் அவருக்கு எதிரான நேரடி குற்றச்சாட்டுகள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaaakob-ஐ லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் விசாரித்ததாக வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும் Tan Sri Azam Baki விளக்கமளித்தார்.

MACC akan menyiasat lapan individu lagi berhubung kes rasuah melibatkan empat pegawai khas bekas Perdana Menteri, Datuk Seri Ismail Sabri Yaakob. Tiada pertuduhan langsung terhadap Ismail Sabri setakat ini, dan beliau tidak disoal siasat oleh MACC.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *