அரசாங்க நிலத்தில் சட்டவிரோதத் தொழில்சாலை நடத்திய எழுவர் கைது!

top-news

பிப்ரவரி 28,

அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை அபகரித்து மறுசுழற்சி மையம் நடத்தியதாக 2 உள்ளூர் நபர்களும் 5 வெளிநாட்டினர்களும் என 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பகாங் மாநில அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. காலை 11.30 மணிக்கு BENTONG மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முறையான ஆவணங்களும் வணிக உரிமமும் இல்லாமல் மறுசுழற்சி மையம் செயல்பட்டு வந்ததாகத் தெரிய வந்துள்ளது. 

சம்மந்தப்பட்ட மறுசுழற்சி மையத்திலிருந்து RM520,000 க்கும் அதிகமானப் பொருள்களும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட உள்ளூர் நபர்கள் இருவரும் மறுசுழற்சி மையத்தை நடத்தி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. சோதனையின் போது மறுசுழற்சி மையத்தில் வேலை செய்து வந்த 24 முதல் 40 வயது வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகத் தெரிய வந்த நிலையில் அவர்களையும் கைது செய்துள்ளதாகப் பகாங் மாநில அமலாக்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

Tujuh lelaki termasuk lima warga Bangladesh ditahan dalam serbuan di sebuah kilang besi haram di atas tanah kerajaan Pahang di Bentong. Ratusan batang besi dan peralatan bernilai lebih RM520,000 dirampas. Semua suspek dibawa ke IPD Bentong untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *