விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நுழைந்த 13 பேர் கைது! அதிகாரிகளிடம் விசாரணை!

- Sangeetha K Loganathan
- 28 Feb, 2025
பிப்ரவரி 28,
KLIA விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நுழைந்த 12 வெளிநாட்டினர்களைக் கடந்த பிப்ரவரி 12 கைது செய்த நிலையில் விமான நிலையச் சோதனை சாவடியில் அவர்களை முறையாகச் சோதிக்காத 5 அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வியட்னாமியர்கள் என்றும் 9 பேர் கம்போடியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ள நிலையில் மலேசியாவிலிருந்து அவர்கள் வெளிநாட்டுக்குச் சட்டவிரோதமாகச் செல்லவிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களை முறையாகச் சோதிக்காத விமான நிலையச் சோதனை அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்குப் பயணிக்கவிருந்தவர்களைச் சோதனை செய்த 5 அரசு அதிகாரிகளையும் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seramai 12 warga asing ditahan di KLIA pada 12 Februari kerana cuba keluar dari Malaysia secara tidak sah. Mereka terdiri daripada tiga warga Vietnam dan sembilan warga Kemboja. Lima pegawai pemeriksaan turut disiasat kerana gagal menjalankan pemeriksaan dengan betul. Kesemua pegawai terbabit kini ditahan reman selama lima hari untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *