இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தும் பாஸ் கட்சி தலைவர்! டி.ஏ.பி சாடல்!

- Sangeetha K Loganathan
- 19 Feb, 2025
பிப்ரவரி 19,
பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang மனிதர்களை ஏக்கோர் (EKOR) என குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாஸ் கட்சியினர் தலைவருக்கு அடிப்படை மலாய் இலக்கணம் தெரியாதா அல்லது இழிவுப்படுத்தும் நோக்கத்தில் அந்த சொல்லாடலைப் பயன்படுத்தினாரா என Kepong நாடாளுமன்ற உறுப்பினர் Lim Lip Eng கேள்வி எழுப்பியுள்ளார்.
விலங்குகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் ஏக்கோர் எனும் அடையாளச் சொல்லை அவர் பயன்படுத்தியது தவறு என்றும் அதனை நாடாளுமன்றத்தில் அவர் பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் Lim Lip Eng தெரிவித்தார். விலங்குகளை ஏக்கோர் என்றும் மனிதர்களை ஓராங் என்றும் பயன்படுத்த வேண்டும் என்பது மழலையர் பள்ளிப் பாடத்திட்டத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அடிப்படை மலாய் இலக்கணம் அறியாதவரா Tan Sri Abdul Hadi Awang அல்லது மக்களை இழிவுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர் அந்த சொல்லாடலைப் பயன்படுத்தினாரா எனும் கேள்வியை Kepong நாடாளுமன்ற உறுப்பினர் Lim Lip Eng முன்வைத்துள்ளார்.
Ketua PAS Tan Sri Abdul Hadi Awang mencetuskan kontroversi apabila menggunakan istilah "ekor" merujuk kepada manusia. Ahli Parlimen Kepong Lim Lip Eng mempersoalkan sama ada beliau tidak memahami tatabahasa Melayu asas atau sengaja menggunakan istilah tersebut untuk menghina.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *