RM 114,000 மதிப்பிலானப் பட்டாசுகளுடன் ஆடவர் கைது!

top-news

பிப்ரவரி 27,

சட்டவிரோதமாகப் பட்டாசுகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 30 வயது ஆடவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் RM 114,000 மதிப்பிலானப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக PGA கடத்தல் சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கிளாந்தானில் உள்ள Bachok பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு 11 மணிக்கு இச்சோதனை மேற்கொண்டதில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட ஆடவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் அண்டை நாட்டிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வந்ததாகவும் மலேசியாவில் பட்டாசுகளின் விலை இரு மடங்காக விற்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஆடவர் மேலதிக விசாரணைக்காக Bachok மாவட்ட்டக் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki berusia 30 tahun ditahan di Bachok, Kelantan selepas polis menemui mercun bernilai RM114,000 di rumahnya. Mercun itu dipercayai diseludup dari negara jiran untuk dijual di Malaysia pada harga lebih tinggi. Suspek diserahkan kepada polis untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *