காதலை மறுத்த பெண்ணைத் தாக்கிய ஆடவர்! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 27 Feb, 2025
பிப்ரவரி 27,
பெண் பாதுகாவலரை ஆடவர் ஒருவர் கடுமையாகத் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக Serdang மாவட்டக் காவல் ஆணையர் A.A.Anbalagan தெரிவித்தார். நேற்று பிற்பகல் 1.30 மணிக்குப் பாதிக்கப்பட்ட உள்ளூர் பெண் புகார் அளித்துள்ளதை A.A.Anbalagan உறுதிப்படுத்தினார்.
Bandar Puteri Puchong பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணிபுரியும் 32 வயது உள்ளூர் பெண்ணிடம் நள்ளிரவு 12.30 மணிக்குச் சந்தேக நபர் காதலை வெளிப்படுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்த பெண் பாதுகாவலரை மடிப்புக் கத்தியால் காயப்படுத்தி அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் அதிகாலை 3.30 மணிக்குச் சந்தேகநபர் பெண் பாதுகாவலர் இருக்கும் பகுதி வந்து சரமாரியாகத் தாக்கிய நிலையில் உடன் இருந்த மற்றொரு பாதுகாவலர் தடுத்ததாகவும் A.A.Anbalagan விளக்கமளித்தார். பாதிக்கப்பட்ட பெண் பாதுகாவலருக்குச் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் சந்தேக நபரைக் காவல் துறையினர் தேடி வருவதாகவும் Serdang மாவட்டக் காவல் ஆணையர் A.A.Anbalagan தெரிவித்தார்.
Polis sedang memburu lelaki yang menyerang pengawal keselamatan wanita di Bandar Puteri Puchong kerana cintanya ditolak. Suspek yang bersenjata melarikan diri selepas insiden pertama tetapi kembali menyerang. Mangsa mengalami kecederaan ringan dan menerima rawatan hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *