எதிர்க்கட்சிக்குத் தெரிந்ததெல்லாம் பாசாங்கு தான்-அதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்!

- Muthu Kumar
- 06 Mar, 2025
(டிகே.மூர்த்தி)
ஈப்போ, மார்ச் 6-
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், சபையின் சீர்திருத்தம் குறித்து பேசுகையில், பெரிக்காத்தான் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை குறிப்பிடுவதிலும், பாசாங்குத்தனத்திலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்று பேரா
ஆட்சிக்குழு உறுப்பினரும், தெலுக் இந்தான் பாசீர் பெடாமர் சட்டமன்ற உறுப்பினருமான வூ காஹ் லியோங் தெரிவித்தார்.
நாடு கோவிட்-19 தாக்கத்தின் போது, பெரிக்காத்தான் எதிர்க்கட்சியினர் செய்த ஷெரட்டோன் நிகழ்வால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது நாடாளுமன்ற சபாநாயகராக பான்ஸ்ரீ அரிப் மற்றும் துணைச் சபாநாயகராக தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் ஆகியோர் இருந்துள்ள நிலையில், அவர்களை அப்பதவியிலிருந்து அவசர அவசரமாக நீக்கியதில், எதிர்க்கட்சியினர் எத்தனை பெரிய பேராசைக் கொண்டவர்கள் என்பது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், கோவிட்-19 காலத்தின் போது அவசரக்காலம் பிறப்பிக்கப்பட்டது. அதனால், நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். ஆனால், ஷெரட்டோன் நடவடிக்கை மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர்களை நீக்கவே ஒரு நாள் அமர்வு கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற சபையின் சீர்திருத்தம் குறித்து எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பேசுவது உண்மையிலேயே வெட்கக்கேடானது. சிறிது காலத்திற்கு முன்பு இன்றைய எதிர்க்கட்சி பிரதிநிதிகளே ஜனநாயகத்தை அழித்தவர்கள் தான், இப்போது நாடாளுமன்ற சபையில் சீர்த்திருத்த முழக்கத்தை எழுப்புகின்றனர்.
இவர்கள் சீர்திருத்தத்தை விரும்புபவர்களாக இருந்தால், நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஏன் வாக்களிக்கவில்லை? அக்கூட்டத்தில் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொள்ளாத மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தை சீர்திருத்த விருப்பம் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் வூ காஹ் லியோங் குறிப்பிட்டார்.
மடானி அரசாங்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்னும் நிறையவே ஆற்ற வேண்டிய பணிகள் உண்டு என்றும் அவர் விவரித்தார். சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை பெரிக்காத்தான் எதிர்க்கட்சியிடம் பாசாங்கு என்பது தான் சீர்திருத்தமாகப் பார்க்க முடிகிறது என்றார்.
Ahli Dewan Undangan Negeri Teluk Intan, Woo Kah Leong, mengkritik pembangkang Perikatan kerana bercakap mengenai reformasi Parlimen. Beliau mengingatkan tindakan mereka semasa Langkah Sheraton dan darurat COVID-19. Woo juga mempersoalkan ketidakhadiran mereka dalam undian pindaan Perlembagaan terbaru.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *