போலிசாரிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் வீட்டுக்குள் புகுந்த லாரி! ஓட்டுநர் கைது!

- Sangeetha K Loganathan
- 20 Feb, 2025
பிப்ரவரி 20,
போக்குவரத்துக்குக் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் சோதனையில் லாரியை நிறுத்தாமல் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநரைக் கைது செய்துள்ளதாக மலாக்கா மாநில JPJ இயக்குநர் Muhammad Firdaus Shariff தெரிவித்தார். முன்னதாக ஜேபிஜே வாகனம் லாரியைத் துரத்தும்படியானக் காணொலி சமூக வலைத்தலத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட 27 வயது லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் லாரியிலிருந்து வெளியேறிய போது லாரி Sungai Udang சாலையோரத்தில் உள்ள வீட்டை மோதி விபத்துக்குள்ளானது.
சம்மந்தப்பட்ட லாரியை Ayer Kerohவிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் துரத்திய நிலையில் Taman Krubong Jaya குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த லாரி வீட்டின் சுவரை மோதி விபத்துக்குள்ளானதாக மலாக்கா மாநில JPJ இயக்குநர் Muhammad Firdaus Shariff தெரிவித்தார். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்தவர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Seorang pemandu lori berusia 27 tahun ditahan selepas cuba melarikan diri daripada pemeriksaan JPJ di Melaka. Lori yang dipandu melanggar dinding sebuah rumah di Taman Krubong Jaya. Tiada kecederaan dilaporkan dalam kejadian ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *