லாரி விபத்தில் கணவன் பலி! மனைவி படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 22 Feb, 2025
பிப்ரவரி 22,
கோலா கிராயிலிருந்து குவா மூசாங் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 வயதான லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் லாரியில் இருந்த அவரின் மனைவி படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.20 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாகக் கோலா கிராய் மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Razani Mamat தெரிவித்தார். பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லாரியிலிருந்து பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் லாரியில் சிக்கியிருந்த 48 வயது லாரி ஓட்டுநரின் உடலை மீட்டதாகவும் விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் Razani Mamat தெரிவித்தார்.
Seorang pemandu lori maut selepas kenderaannya hilang kawalan dan terjunam ke dalam gaung di jalan Kuala Krai-Kuala Musang. Isterinya cedera dan dihantar ke hospital. Pihak berkuasa sedang menyiasat punca kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *