LOVE SCAM! RM 93,857 இழந்த இளம்பெண்கள்!

- Sangeetha K Loganathan
- 03 Mar, 2025
மார்ச் 3,
LOVE SCAM எனப்படும் ஆன்லைன் மோசடியில் 24 வயது தாதியர் RM40,000 இழந்த நிலையில் பகுதிநேர வேலை எனும் மோசடியில் RM53,857 பணத்தை மற்றொரு இளம் பெண் இழந்துள்ளதாகத் தென்ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.
ஆன்லைனில் அறிமுகமானக் காதலன் வேலையிடத்தில் எதிர்நோக்கிய சிக்கலிலிருந்து வெளயேறுவதற்காகப் பணம் கேட்டதால் காதலனுக்கு உதவுவதற்காகத் தாதியராகப் பணியாற்றும் 24 வயது பெண் RM40,000 வங்கியின் மூலமாகப் பரிவர்த்தனை செய்த நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதே போன்ற மற்றொரு வழக்கில் பகுதி நேர வேலைக்காகப் பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் வேலையை வழங்குவதாகவும் அதற்கு முதலீடாகக் குறிப்பிட்ட பணத்தைச் செலுத்தி ஏமாந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Seorang jururawat kerugian RM40,000 selepas diperdaya dalam ‘love scam’, manakala seorang wanita ditipu RM53,857 melalui tawaran kerja sambilan dalam talian. Kedua-dua kes melibatkan pemindahan wang ke akaun berbeza.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *