நகரத்தை மாற்றவதற்குப் பதிலாக அரசாங்கத்தை மாற்றுங்கள்! மகாதீர் ஆவேசம்!

top-news

மார்ச் 4,


உள்ளாட்சி வீட்டுவசதி அமைச்சால் கொண்டு வரப்பட்டுள்ள PSB சட்டத்திருத்தம் மலாய்க்காரர்களில் அதிகம் பாதிக்கும் என்றும் நகரப்புறங்களை மாற்றுவதற்குப் பதிலாக அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். 
நகர்புற மேம்பாடு மசோதா எனும் RUU PSB திட்டம் அமல்படுத்துவதும் இடங்கள் பெரும்பாலான மலாய்க்காரர்கள் வசிக்கும் இடமாக இருப்பதால் மலாய்க்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என மகாதீர் தெரிவித்துள்ளார். பெரும்பாலான மலாய்க்காரர்கள் ஏழையாக இருந்தாலும் நகர்புறங்களின் செலவீனங்களுக்கு ஏற்ப அவர்களும் பட்ஜெட்டோடு வாழ்ந்து வரும் நிலையில் நகர்புற மேம்பாடு திட்டங்களால் செலவீனங்கள் அதிகரித்து பெரும்பாலான மலாய்க்காரர்கள் பாதிப்புக்குள்ளாவதாக மகாதீர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் பின்னால் மலாய்க்காரர்களின் குடியிருப்புகளை அவர்களிடமிருந்து அபகறித்து ஆடம்பர அடுக்குமாடிகளை உருவாக்கி மலாய்க்காரர்களின் வாழ்வியல் சூழலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்படியாக அமைந்துள்ளதாகவும் நகரங்களை மாற்றுவதற்குப் பதிலாக, இந்த அரசாங்கத்தை மாற்றுங்கள் என மகாதீர் தெரிவித்துள்ளார்.

Bekas Perdana Menteri Mahathir Mohamad mengkritik pindaan Akta PSB yang dikatakan memberi kesan besar kepada orang Melayu. Beliau mendakwa projek pembangunan bandar boleh meningkatkan kos sara hidup dan merampas kediaman Melayu. Beliau menyeru rakyat menukar kerajaan daripada mengubah bandar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *