RM 429,000 மதிப்பிலானப் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

- Sangeetha K Loganathan
- 20 Feb, 2025
பிப்ரவரி 20,
நெகிரி செம்பிலான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் RM 429,000 மதிப்பிலானப் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Ahmad Dzaffir தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெளிநாட்டினர் என்றும் இருவர் உள்ளூர் ஆடவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள்களுடன் RM 66,830 ரிங்கிட் ரொக்கப் பணமும், பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதன் மொத்த மதிப்பு RM 2.8 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Ahmad Dzaffir தெரிவித்தார். கைது செய்யப்பட்டிருக்கும் ஐவரும் 7 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இருவர் போதைப்பொருள் உற்கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Polis Negeri Sembilan berjaya menumpaskan makmal dadah haram di Nilai, dengan rampasan dadah bernilai RM429,000 serta aset keseluruhan RM3.2 juta. Lima suspe termasuk tiga warga asing ditahan dan pelbagai peralatan memproses dadah serta wang tunai turut dirampas. Dua daripada mereka didapati positif dadah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *