RM60,000 கடனைப் பெற, 1 லட்சத்தை இழந்த முதியவர்!

top-news

மார்ச் 5,

ஓய்வு பெற்ற மூதாட்டி ஒருவர் RM60,000 கடன் பெற விரும்பி ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் RM105,311 இழந்துள்ளார். அவசரத் தேவைக்காகக் கடன் பெற விரும்பிய முதாட்டி கடன் வழங்கும் நிறுவனத்தின் விளம்பரத்தைச் சமூகவலைத்தலத்தில் கண்டு கடனுக்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்த நிலையில் கடன் தொகையான RM60,000-ஐ பெற முன்பணமாகச் சில தொகைகள் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட நிலையில் அவரும் சுமார் RM105,311 வரையில் பணம் செலுத்தி ஏமாந்ததாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 8 முதல் 26 வரையில் 19 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 35 முறை பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் மொத்த தொகை RM105,311 ரிங்கிட்டை 61 வயதான அந்த மூதாட்டி இழந்துள்ளதாக Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். முன்பணத்தைச் செலுத்தாமல் இருந்தால் அவரின் அடையாள அட்டையுடன் இருக்கும் புகைப்படத்தைச் சமூகவலைத்தலங்களில் பரப்பி அவதூறு செய்வதாக மிரட்டப்பட்டதால் மோசடி கும்பல் கேட்ட பணத்தைக் கொடுத்ததாகப் பாதிகப்பட்ட 61 வயது முதியவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Seorang wanita berusia 61 tahun kerugian RM105,311 selepas ditipu sindiket pinjaman dalam talian. Mangsa yang mahu meminjam RM60,000 terpaksa membuat bayaran pendahuluan berulang kali sebelum menyedari dirinya ditipu. Kes disiasat oleh pihak polis Pahang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *