சொரணை கெட்ட 11 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்! MITRA விவகாரத்தில் MIPP கட்சி சாடல்!

- Thina S
- 14 Jul, 2025
மலேசிய இந்தியர்களுக்காக அரசாங்கம் வழங்கிய மித்ரா நிதி முடங்கியிருப்பதாகவும், மித்ராவின் செயல்பாட்டில் எந்தவொரு வெளிப்படைத் தன்மையும் இல்லை என்றும், கேள்விக் கேட்க வேண்டிய 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொரணை இல்லாமல் அப்படியே இருப்பதாகவும் இதனால் பல பொது இயக்கங்கள் மித்ராவிடமிருந்து எந்தவொரு தெளிவான பதிலும் இல்லாமல், நம்பி ஏமாந்திருப்பதாக மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன், MIPP கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் Justin Prabakaran, MIPP கட்சியின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவரும் தேசிய உச்சமன்ற உறுப்பினருமான Dato' Sathes Kumar ஆகியோர் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
மித்ராவின் சிறப்பு நடவடிக்கைக் குழு தலைவரும் BATU நாடாளுமன்ற உறுப்பினருமான Prabakaran Parameswaran மித்ரா ஒன்றும் கத்திரிக்கா வியாபாரம் இல்லை எடுத்தவுடன் உடனுக்குடன் செய்வதற்கு என பொறுப்பற்ற பதிலை மட்டுமே கொடுத்து வருவதாக நேற்று MIPP கட்சியினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். அந்த கத்திரிக்காய் வியாபாரத்தையாவது இந்த 11 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருப்படியாகச் செய்வார்களா என MIPP கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இந்திய சமூகத்திற்கு 100 மில்லியன் என்பது போதாது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த 100 மில்லியனையாவது இவர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்று இந்தியர்களுக்குக் கொடுக்காமல் மெளனமாகவே இருக்கிறார்கள். ஏதோ மேல் ஏதோ பெய்தால், அமைதியாக இருக்குமே அப்படி இந்த 11 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என MIPP கட்சியினர் அரசாங்கத்தின் 11 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடுமையாகச் சாடினர். 100 மில்லியன் என்பது இந்திய சமூகத்திற்கு அரசாங்கம் பிச்சை தான் போடுகிறது. அந்த பிச்சையைக் கூட பெறாத இவர்கள் இந்தியர்களின் உரிமையையா மீட்டெடுக்க போகிறார்கள்? எனும் கேள்வியை மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன் எழுப்பினார்.
Dialysis நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்களுக்கு மித்ராவின் நிதி வழங்கப்படுகிறது. இதனால் என்ன சமூகப்பொருளாதார மாற்றத்தை நம் இந்திய சமூகம் கண்டு விடும் என MIPP கட்சியின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவரும் தேசிய உச்சமன்ற உறுப்பினருமான Dato' Sathes Kumar கேள்வி எழுப்பினார். ஆனால் அதையாவது இந்திய சமூகத்திற்கு முழுமையாக வழங்கப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது, மித்ராவில் Dialysis உதவி நிதிக்காக விண்ணப்பம் செய்து 6 மாதங்கள் கழித்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வளவு தாமதமாக வழங்குவதையும் ஒரு சிலர் ஆதரிக்கிறார். அதிலும் இந்த 11 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாயே திறப்பதில்லை என Dato' Sathes Kumar தெரிவித்தார்.
காப்பாரில் உள்ள பாலர் பள்ளி, மித்ராவின் பாலர் பள்ளிக்கான நிதியை விண்ணப்பித்து 6 மாதங்கள் காத்திருக்கிறார்கள். சம்மந்தப்பட்ட பாலர் பள்ளி வெளியிலிருந்து நிதியைப் பெற முயற்சித்தால் மித்ராவின் நிதி கிடைக்காது என மித்ராவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இதனால் சம்மந்தப்பட்ட பாலர் பள்ளியைத் தொடர்ந்து நடத்த முடியாமல் அவதியுற்று வருவதாகவும் Dato' Sathes Kumar தெரிவித்தார். ஆனால் மித்ராவின் நிதி வெளியாகியது, இவ்வளவு பேர் மித்ராவின் நிதியைப் பெற விண்ணப்பித்தார்கள், இத்தனை ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இத்தனை ஆயிரம் பேருக்கான நிதி மித்ரா விரைந்து வெளியிடும் என தொடர்ந்து 3 மாதங்களாகக் கூக்குரலிட்டு வருகிறார் மித்ராவின் சிறப்பு நடவடிக்கைக் குழு தலைவரும் BATU நாடாளுமன்ற உறுப்பினருமான Prabakaran Parameswaran என MIPP கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த மித்ராவின் நிதியைப் பெற்றவர்களின் விவரங்களை மித்ரா பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க மித்ராவுக்கு 18 நாள்கள் கெடு வழங்குவதாகவும், வெளியிடாமல் மறுத்தால் நாடாளுமன்றத்தில் முற்றுகை போராட்டத்தை மேற்கொள்வதாக மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன் எச்சரிக்கை விடுத்தார். மலேசிய இந்தியர்களைக் கடனாளியாக மாற்றிய துணை அமைச்சரும் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவருமான Dato' Sri Ramanan போல மேலும் இந்தியர்களைக் கடனாளியாக்காதீர் என்றும் MIPP ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன் வலியுறுத்தினார். உண்மையில் இந்தியர்களைக் கூப்பிட்டு கூப்பிட்டு கடன் கொடுத்த ஒரே தலைவர் Dato' Sri Ramanan என்றும் அந்த கடனைப் பெற்றவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்ததா இல்லையா என்பதைப் பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்ளாத தலைவரும் Dato' Sri Ramanan என MIPP ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன் வஞ்சத்துடன் புகழ்ந்தார்.
NURUL IZZAH
ANWAR இந்தியர்களைப் பற்றி எதையோ பேசிவிட்டார் என
ஆளும்கட்சியைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுக்கொரு பக்கமாக
மல்லுக்கட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோருமே ஆளும்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்கள் என்பதை மறந்து விட்டார்களா? இந்தியர்கள்
எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அரசாங்கத்தின் மூலமாகத் தீர்வுக் காணுவார்கள்
என இந்தியர்கள் காத்திருந்தால், எங்களைப் போல
இவர்களின் அரசாங்கத்தை இவர்களே கேள்வி கேட்கிறார்கள். கேள்விக் கேட்க வேண்டியது
எதிர்கட்சியான நாங்கள். இவர்களுக்குப் புரிகிறதா இல்லையா? இவர்கள்
இன்னும் எதிர்கட்சி என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என MIPP ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன் கேள்வி எழுப்பினார். அரசாங்கத்தில்
இருப்பவர்கள் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலையும் தீர்வையும் வழங்க வேண்டுமே தவிர
இவர்களே அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள். இனிமேலாவது இந்த 11 நாடாளுமன்ற
உறுப்பினர்களும் வாயைத் திறந்து மித்ராவின் செயல்பாடுகளை விரைவுப்படுத்த வேண்டும்
என்றும் மித்ராவின் நிதியைப் பெற்றவர்களின் விவரங்களை இன்னும் 18 நாள்களுக்குள்
மித்ரா வெளியிட வேண்டும் என்றும் இல்லையேல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போதே
முற்றுகையிடுவோம் என மலேசிய இந்திய
மக்கள் கட்சி (MIPP) ஒருங்கிணைப்பாளர் உமாகாந்தன், MIPP கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர்
Justin Prabakaran, MIPP
கட்சியின் சிலாங்கூர் மாநிலத் துணைத் தலைவரும் தேசிய உச்சமன்ற உறுப்பினருமான Dato'
Sathes Kumar ஆகியோர்
எச்சரிக்கை விடுத்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *