விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்! 35 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த பெண் பலி!

top-news

பிப்ரவரி 26,

தலைநகரின் டாமான்சாரா ஷா அலாம் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் 35 அடி உயரத்திலிருந்து விழுந்த பெண் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnizam Ja'afar தெரிவித்தார். மாலை 6.50 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் கிடைத்ததாகவும் நெடுஞ்சாலையின் பாலத்தின் கீழிருந்து 30 வயது உள்ளூர் பெண் சடலமாக மீட்கப்பட்டதாகவும் Shahrulnizam Ja'afar தெரிவித்தார்.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னாள் இருந்த வாகனத்தின் பின் மோதி விபத்துக்குள்ளானதில் 35 மீட்டர் ஆழமுள்ள பாதாளத்தில் தூக்கி எறியப்பட்டு அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 35 மீட்டர் பள்ளத்தாக்கில் அவர் விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

Seorang penunggang motosikal wanita maut selepas terjatuh dari jambatan setinggi 35 meter di lebuhraya Damansara-Shah Alam. Mangsa hilang kawalan lalu melanggar kenderaan di hadapan sebelum tercampak ke bawah. Polis mengesahkan mangsa mengalami kecederaan parah di kepala.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *