லாரியின் பின் மோதிய மோட்டார் சைக்கிள்! இளம்பெண் பலி!

- Sangeetha K Loganathan
- 19 Feb, 2025
பிப்ரவரி 19,
காஜாங் சில்க் நெடுஞ்சாலையில் பழுதாகியிருந்த லாரியின் பின் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 29 வயது இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பகல் 1 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் லாரியின் பின் மோதிய பெண், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்ததால் பின்னால் வந்த இரண்டு வாகனங்களும் அவரை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் ஓட்டுநரிடமும் மற்ற வாகனமோட்டிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் உயிரிழ்ந்தவர் செர்டாங் மருத்துவமனையின் தாதியர் Nurul Ilham Nordin எனும் 29 வயது தாதியர் என்றும் தெரிய வந்துள்ளதாக Sepang, மாவட்டக் காவல் ஆணையர் Shan Gopal Krishnan தெரிவித்தார்.
Seorang jururawat berusia 29 tahun maut selepas motosikalnya melanggar belakang lori rosak di Kajang-SILK. Dia terjatuh dan dilanggar dua kenderaan lain. Polis menyiasat pemandu lori dan kenderaan terbabit untuk tindakan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *