மின்னியல் கழிவு மீதான விசாரணை:வெ.15 மில்லியன் பணமுள்ள 61 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 4 -

மின்சார மற்றும் மின்னியல் கழிவு பொருள்கள் சட்டவிரோதமாக கையாளப்பட்டதன் தொடர்பில், மொத்தம் ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி பணம் வைக்கப்பட்டுள்ள 61 வங்கிக் கணக்குகளை, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) முடக்கியுள்ளது.

அதோடு, இந்த விவகாரம் தொடர்பில் நிறுவனத்தின் உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டதாக, எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கைப் பிரிவு) அஹ்மாட் குசைரி யஹ்யா தெரிவித்தார்.

"கைது செய்யப்பட்டுள்ள அமலாக்க அதிகாரிகள், இதில் பாதுகாத்து வந்ததாக நாங்கள் நம்புகிறோம் என்று எம்ஏசிசி தலைமையகத்தில் நேற்று திங்கள்கிழமை நடந்த ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.மின்னியல் கழிவுகள் அகற்றப்படும் பகுதிகளில் இருந்த 420 அந்நியத் தொழிலாளர்களும், குடிநுழைவு இலாகாவினால் கைது செய்யப்பட்டதாக குசைரி தெரிவித்தார்.

சிலாங்கூரின் தெலுக் பங்லிமா காராங் மற்றும் ஜொகூர். சிகாமட்டின் பூலோ கசாப் ஆகிய இரு பகுதிகளில் செயல்பட்டு வந்த 12 மின்னியல் கழிவு தொழிற்சாலைகளில் முன்னதாக, எம்ஏசிசி, குடிநுழைவு இலாகா மற்றும் சுற்றுச் சூழல் இலாகா ஆகியவற்றினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

SPRM membekukan 61 akaun bank bernilai RM10.5 juta berkaitan pengurusan haram sisa elektrik dan elektronik. Seramai 26 individu, termasuk pemilik syarikat dan pegawai penguatkuasa, ditahan. Selain itu, 420 pekerja asing ditahan oleh imigresen dalam operasi di Selangor dan Johor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *