டத்தோ' பட்டம் கொண்ட நபர் செய்த முதலீட்டு மோசடி-32 போலீஸ் புகார்கள் பெறப்பட்டன!

- Muthu Kumar
- 24 Feb, 2025
கோலாலம்பூர், பிப்.24-
டத்தோ பட்டம் கொண்ட ஆடவரின் பின்னணியில் பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டத்தில் மோசடி செய்யப்பட்டது தொடர்பில் வெ.1,398,000 இழப்பு சம்பந்தப்பட்ட 32 போலீஸ் புகார்கள் பெறப்பட்டதை புக்கிட் அமான் உறுதிப்படுத்தியது.
இவ்வனைத்து போலீஸ் - புகார்களும் ஜனவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கிக் • கடந்த வெள்ளிக்கிழமை வரை ஒரு முதலீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்தவையாகும் என்று புக்கிட் - அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார்.
வெ.638,205 இழப்பீடு சம்பந்தப்பட்ட மோசடி குற்றத்தில் 420ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் 15 விசாரணைக் கோப்புகள் திறக்கப்பட்டு விட்டன. இது தொடர்பில் மேற்கொண்ட தொடக்ககட்ட - விசாரணைப்படி கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்ட இந்நிறுவனம் 2 இயக்குநர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 2022ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இயக்குநராக நியமிக்கப்பட்ட இந்த டத்தோவும் ஒருவராவார்.
அனைத்து விசாரணைக் கோப்புகளும் இன்னும் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு ப்பட்டு வருவதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *