இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு பயிற்சி

- Muthu Kumar
- 02 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 2-
இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி அது தொடர்பான பாதுகாப்பு பயிற்சியை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தும்.
பல தரப்பட்ட மக்களை உள்ளடக்கி இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தும் தொடர்பு அமைச்சின் இலக்குடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எம்சிஎம்சியின் துணை நிர்வாக இயக்குநர் டத்தோ சுல்கர்னைன் முஹமாட் யாசின் தெரிவித்தார்.
மாணவர் பிரதிநிதித்துவக் குழுக்களுடன் இணைந்து உயர்கல்வி கூடங்களிலும், பள்ளிகளிலும் ஒருங்கிணைந்து இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக டத்தோ சுல்கர்னைன் கூறினார்.
சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நாங்கள் பயிற்சி வழங்குகிறோம். மலேசிய தகவல் துறை மற்றும் மடானி சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். காரணம் அவர்கள் சமூகத்துடன் நெருக்கமாக உள்ளனர். மேலும் தேசிய தகவல் பரப்பு மையத்திலும் பயிற்சி அளிக்கிறோம்", என்று அவர் கூறினார்.அண்மையில், பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளியேறிய நிகழ்ச்சியில் சுல்கர்னைன் கலந்து கொண்டார்.இணைய மோசடியினால் ஏற்படும் தீங்கும் ஆபத்தும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் வேறுபட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இணைய அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுப்பதில் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் அதற்கான மன உறுதியை வளர்ப்பதற்கும் விரிவான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுல்கர்னைன் குறிப்பிட்டார்.
MCMC akan memperluaskan latihan keselamatan siber di seluruh negara bagi meningkatkan kesedaran. Menurut Timbalan Ketua Pegawai Operasi, Datuk Zulkarnain Mohamad Yasin, program ini melibatkan pelajar dan masyarakat. Kerjasama dengan agensi berkaitan dijalankan untuk menangani ancaman dalam talian dan meningkatkan keupayaan menghadapi risiko siber.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *