விபத்தை ஏற்படுத்திய ஆடி கார் ஓட்டுநரைத் தேடும் போலீஸ்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: நேற்று மாலை ஜோகூர் பாருவில் நான்கு கார்கள் மீது மோதிய ஆடி காரின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

 ஜொகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமாட் கூறுகையில், ஆடி கார் ஜாலான் செரிகலாவில் ஜாலான் டத்தோ சுலைமான் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது புரோட்டான் பெர்சோனா காரில் மோதியதாகத் தெரிவித்தார்.

இந்த மோதலில் ஆடி கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் மீது மோதியது.

யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றும், ஆடியின் ஓட்டுநரை எங்கும் காணவில்லை என்றும், சம்பவம் குறித்து இன்னும் காவல் துறை புகார் அளிக்கவில்லை என்றும் ரவூப் கூறினார்.

விபத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மேல் விசாரணைக்கு வருமாறு தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக சாலைப் போக்குவரத்து விதிகள் 1959  10  வது விதியின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *