கல்லூரி மாணவன் கொலை வழக்கு: தற்காப்பு வாதம் புரியுமாறு 13 பேருக்கு உத்தரவு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச். 1-

சபாவின் லாஹாட் டத்து தொழில் பயிற்சிக் கல்லூரியில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 17 வயதுடைய நஸ்மி ஐஸாட் நாருல் அஸ்வான் என்ற மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் தங்களை தற்காத்துக் கொள்ளுமாறு 13 இளைஞர்களுக்கு தாவாவ் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பதினாறு முதல் 19 வயதுக்குட்பட்ட அந்த 13 இளைஞர்களுக்கு எதிரான வழக்கைத் தொடர, போதுமான முகாந்திரங்கள் இருப்பதை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக, நீதிபதி டங்கன் சிகோடோல் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.அந்த 13 பேரின் தற்காப்பு வாதங்கள் மார்ச் 10 முதல் 14 ஆகிய தேதிவரை நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

நஸ்மி ஐஸாட்டை மார்ச் மாதத்தில் கொலை செய்ததாக அந்த 13 பேருக்கும் எதிராக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் லாஹாட் டத்து மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் கூட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி இரவு 9 மணிக்கும் மறுநாள் மார்ச் 22ஆம் தேதி காலை 7.35 மணிக்கும் இடையில், அக்கல்லூரியின் தங்குமிட அறை ஒன்றில் நஸ்மி ஐஸாட்டை கூட்டாகச் சேர்ந்து கொன்றதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 40 ஆண்டு வரைக்குமான சிறை மற்றும் அதிகபட்சம் 12 பிரம்படிகள் வழங்க வகை செய்யும், குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 302இன் கீழ் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Mahkamah Tinggi Tawau mengarahkan 13 remaja membela diri dalam kes pembunuhan Nazmi Aizat di Kolej Latihan Vokasional Lahad Datu, Sabah tahun lalu. Jika disabitkan kesalahan mereka berdepan hukuman mati atau penjara sehingga 40 tahun serta sebatan maksimum 12 kali.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *