அதிகாலை நிலச்சரிவில் பெண் பலி!

- Shan Siva
- 05 Mar, 2025
கோத்த கினபாலு, மார்ச் 5: கம்போங் லோக் போனு ஜாலன் செபாங்கரில் இன்று
அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண் உயிரிழந்தார்.
சபா தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறைக்கு அதிகாலை 4.32 மணிக்கு சம்பவம் குறித்து தகவல்
கிடைத்ததாகவும், கோத்த கினபாலு
தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 பணியாளர்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த குழு, நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீடு புதைந்திருப்பதைக் கண்டறிந்த நிலையில், ஒரு பெண்ணை, குழுவினர் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். எனினும் சம்பவ இடத்திலேயே அப்பெண் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவரது மகன் பாதுகாப்பாக உள்ளார், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அந்தத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Pada awak pagi ini berlaku tanah runtuh di Kampung Lok Bunu, Jalan Sepanggar yang mengorbankan seorang wanita. Pasukan bomba menerima laporan pada 4.32 pagi dan menemui mangsa di bawah runtuhan rumahnya. Anaknya selamat tanpa kecederaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *