சுங்க அதிகாரிகளில் சிலருக்கு இனி உடல் கேமராக்கள் பொருத்தப்படும்!

- Shan Siva
- 26 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 26: நாட்டின் முக்கிய சோதனைச் சாவடிகள் போன்ற உணர்திறன்
மிக்க பகுதிகளில் பணியில் இருக்கும் சுங்க அதிகாரிகள் இப்போது ஊழலைக்
கட்டுப்படுத்தவும், அவர்களின் சரியான
நடத்தையை உறுதிப்படுத்தவும் உடல் கேமராக்களை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,
எல்லா அதிகாரியும் அந்த உபகரணங்களை அணிய
மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு
முனையங்களில் பணியில் இருக்கும் சில அதிகாரிகளுக்கும், விமான நிலையங்களில் பொருள் பொதிகளைப்
பரிசோதிப்பவர்களுக்கும் உடல் கேமராக்கள் அவசியம் என்று சுங்கத் துறை துணை
இயக்குநர் நோர்லேலா இஸ்மாயில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *