சர்ச்சைக்குரிய காணொளி வெளியீடு-போலீஸ் விசாரணை நடத்துகிறது!

- Muthu Kumar
- 05 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 5-
தைப்பூச காவடி ஆட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் காணொளியொன்றை வெளியிட்டதன் தொடர்பில் ஆஸ்ட்ரோவுக்குச் சொந்தமான ஏரா எஃப்எம் வானொலி நிலையத்தின் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தேசியப் போலீஸ் படைத் தலைவர் நேற்று தெரிவித்தார்.
அந்த விவகாரம் தொடர்பில் தண்டனைச் சட்டம் 298ஆவது பிரிவின்கீழும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233ஆவது பிரிவின்கீழும் விசாரணைக் கோப்பு திறக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.தண்டனைச் சட்டம் 298ஆவது பிரிவு மற்றவர்களின் மன மற்றும் மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் வழக்கைக் கையாளக்கூடியதாகும். அதே வேளையில், 233ஆவது பிரிவு தொலைத் தொடர்புச் சாதனங்கள் வாயிலாக தகாத தகவல்கள் வெளியிடுவதைக் கையாளக் கூடிய சட்டமாகும்.
அக்காணொளி தொடர்பில் நாடு முழுவதிலுமிருந்து ஆறு புகார்களைப் போலீசார் பெற்றுள்ளனர் என்று ரஸாருடின் கூறினார்.இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையிலான அக்காணொளியை முகநூல் பக்கத்தில் கண்ணுற்ற பொறியியலாளர் ஒருவர் அது குறித்து முதல் ஆளாகப் போலீசில் புகார் செய்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
Polis sedang menyiasat kakitangan Era FM milik Astro berhubung video menghina tarian kavadi Thaipusam. Siasatan dijalankan di bawah Seksyen 298 Kanun Keseksaan dan Seksyen 233 Akta Komunikasi 1998. Enam laporan diterima di seluruh negara, dengan seorang jurutera menjadi pelapor pertama di Facebook.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *