நாயை அடித்த வெளிநாட்டவர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 28: இரண்டு நாட்களுக்கு முன்பு வைரலான ஒரு சம்பவத்தில், நாயை மீண்டும் மீண்டும் அடித்ததற்காக ஒரு வெளிநாட்டு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பதிவேற்றிய ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் போலீசார் பார்த்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

இது தொடறர்பாக 33 வயது நபர் ஒருவர் புகார் அளித்த நிலையில்,  முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 1.09 மணியளவில் ஜொகூர்,  செனாயில் உள்ள ஒரு வணிகப் பகுதியில் நடந்ததாக தெரியவந்துள்ளது என்று கூலாய் காவல்துறைத் தலைவர் டான் செங் லீ கூறினார்.

இதைத் தொடர்ந்து, கூலாய் காவல் தலைமையகத்தின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உதவ 45 வயது வெளிநாட்டவரை கைது செய்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் இன்று கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று டான் கூறினார்.

நாய் நன்றாக  இருப்பதாகவும், புகார்தாரர் அதை நன்கு பராமரித்து வருவதாகவும் ஓர் ஆய்வு உறுதிப்படுத்தியது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 428 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக டான் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சந்தேக நபர் விலங்கு நலச் சட்டம் 2015 இன் பிரிவு 29(1)(a) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார். இது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM20,000 முதல் RM100,000 வரை அபராதம் விதிக்க வகை செய்கிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *