கோல குராவ் சாலை விபத்தில் தம்பதியர் பலி!

- Shan Siva
- 05 Mar, 2025
ஈப்போ, மார்ச் 5: கோலா குராவ் அருகே பத்து பியான்டாங், ஜாலான் பந்தாய், பத்து 9, இன்று காலை சாலை விபத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.
பலியானவர்கள் பெரோடுவா கெலிசாவின் 59 வயது ஓட்டுநர் மற்றும் அவரது 66 வயது மனைவி உயிரிழந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோட்ஸி நோர் அஹ்மத் தெரிவித்தார்.
அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் அவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்களின் 13 வயது மகன் விபத்தில் காயமடைந்தார்" என்று சபரோட்ஸி கூறினார்.
காலை 7.29 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததையடுத்து, கோலா குராவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழு 9 கிமீ தொலைவில் உள்ள இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
இந்த விபத்தில் பெரோடுவா கெலிசா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்கள் சிக்கின. இருப்பினும், ஹோண்டா சிட்டியின் ஓட்டுநரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சபரோட்ஸி கூறினார்.
Pasangan suami isteri maut dalam kemalangan di Jalan Pantai, Batu 9, Kuala Kurau. Pasanagab tersebut meninggal di tempat kejadian dan anaknya cedera. Pemandu Honda City yang terlibat tidak ditemui.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *