தர்பூசணியுடன் சாப்பிடக்கூடாத நான்கு உணவுகள்!

top-news
FREE WEBSITE AD

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாப்பது அவசியம்.
இதனையடுத்து வெயிலை சமாளிக்க இளநீர், நுங்கு, வெள்ளிரிக்காய், பழச்சாறு போன்ற இயற்கை உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள விரும்புவர். குறிப்பாக அனைவரும் தர்பூசணியை (Water Melon) மிகுந்த விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். ஏனெனில் இது உடலில் நீர் சத்து குறைய விடாமல் பாதுகாக்கும். ஆனால் தர்பூசணி சாப்பிடும்போது சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அது நன்மை அளிப்பதற்கு பதிலாக உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பிறகு என்னென்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை நம் சிந்தனைப் பூங்காவில் தெரிந்து கொள்வோம். கோடைகாலங்களில் அதிகம் விற்பனையாகும் பழங்களின் பட்டியலில் தர்பூசணியும் முக்கிய இடத்தில் உள்ளது. இது உடலை நீர் சத்து குறையாமல் பாதுகாக்கும்.

தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம், இவை அனைத்தும் கோடையில் விருப்பமான பழங்கள். இவற்றில், தர்பூசணியில் போதுமான அளவு நீர் சத்து உள்ளது. மேலும் இது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தருவதோடு வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது. தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள்  காணப்படுகின்றன, இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இது சருமத்தின் பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால் அதை சாப்பிடும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், இல்லையெனில் அது நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும். தர்பூசணியுடன் சில உணவுப் பொருட்களை சாப்பிடும்போது வாயு, அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தர்பூசணி சாப்பிடக் கூடாத 4 உணவுப் பொருட்கள்

• பாலுடன் தர்பூசணி சாப்பிட கூடாது. ஆயுர்வேதத்தின்படி, பாலின் தன்மையும் தர்பூசணியின் தன்மையும் வேறுபட்டவை என்பதால், தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக்கூடாது. தர்பூசணி புளிப்பு தன்மை கொண்டது, பால் குளிர்ச்சியான தன்மை கொண்டது, இதனால் அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.

• முட்டையுடன் தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

தர்பூசணி சாப்பிட்ட உடனே முட்டை சாப்பிடக்கூடாது, ஏனெனில் முட்டையின் தன்மை சூடாகவும், தர்பூசணியின் தன்மை குளிர்ச்சியாகவும் இருக்கும். அப்படி சாப்பிடும்போது மலச்சிக்கலை ஏற்படுத்தும்

• தர்பூசணியை உப்பு தூவி சாப்பிடாதீர்கள். பலர் தர்பூசணியை உப்பு சேர்த்து சாப்பிட விரும்புகிறார்கள், ஆனால் தர்பூசணியில் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் பல தீமைகள் உள்ளன. ஏனெனில் இதைச் செய்வதன் மூலம் உங்கள் உடல் தர்பூசணியிலிருந்து ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற முடியாது.மேலும் நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்படலாம்.

• தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு செய்வது தர்பூசணியை ஜீரணிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பின் பிஎச் அளவை சீர்குலைக்கும். இது அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

       பொறுப்பு துறப்பு: இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *